இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பக்லே ஆகியோருக்கு இடையில் இன்று (2023 ஏப்ரல் 20) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் விகாஷ் சூட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படைத் தளபதி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கினார்.