பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

பதவி விலகும் இந்தியாவில் உள்ள நமீபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் Titus Simon (Brig. Gen Titus Simon) இன்று (ஏப்ரல் 20, 2023) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார்.

இந்தியாவிலுள்ள நமீபிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரியும் பிரிகேடியர் ஜெனரல் Titus Simon, இலங்கை கடற்படைத் தளபதியுடனான இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சிநேகபூர்வ கலந்துரையாடலை மேற்கொண்டார்.

பின்னர், வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பிரிகேடியர் ஜெனரல் Titus Simon, தனது பதவிக்காலத்தில் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் நன்றி தெரிவித்ததுடன் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.