இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை ஆலோசகர்கள், பிரியாவிடை மற்றும் அறிமுகத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தனர்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கடற்படை ஆலோசகராக செயல்படும் Lieutenant Commander RICHARD LISTER மற்றும் புதிய கடற்படை ஆலோசகராக நியமிக்கப்பட உள்ள Lieutenant Commander JESSICA V. DE MONT ஆகியோர் உத்தியோகபூர்வ பிரியாவிடை மற்றும் அறிமுக சந்திப்புக்காக இன்று (2023 மே 19), கடற்படைத் தலைமையகத்தில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தனர்.

இதன்படி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் தற்போதைய கடற்படை ஆலோசகர் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள புதிய கடற்படை ஆலோசகர்களை கடற்படைத் தளபதி வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன், Lieutenant Commander RICHARD A. LISTER இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடற்படை ஆலோசகராக கடமையாற்றிய காலத்தில் வழங்கிய ஆதரவிற்கு கடற்படைத் தளபதி தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.