உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, கடற்படை நடமாடும் பல் மருத்துவ சேவையொன்று நடத்தியது

2023 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஈடுபட்டுள்ள உலக வாய் சுகாதார தினத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை பல் மருத்துவ சேவையினால் நடத்தப்படுகின்ற பல் மருத்துவ சேவைகளின் மற்றுமொரு பகுதியாக 2023 மே 9 முதல் 19 வரை தென்கிழக்கு கடற்படை கட்டளையில் நடமாடும் பல் சேவையொன்று வெற்றிகரமாக நடத்தியது.

இதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் வெல்லவாய, மொனராகலை, பொத்துவில், ஆறுகம்பே, ஒலுவில், தீகவாப்பிய மற்றும் விநாயகபுரம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி இந்த நடமாடும் பல் மருத்துவ சேவை நடத்தப்பட்டதுடன், அப்பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் உட்பட நானூற்று அறுபத்தேழு (467) பேர் இங்கு பல் மருத்துவ சேவைகள் பெற்றனர்.