தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பொறுப்புணர்வு திட்டமாக மேற்கொள்ளப்பட்ட இரத்த தானம் நிகழ்ச்சியொன்று 2023 மே 18 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் கட்டளையின் பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடைபெற்றது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் மேற்பார்வையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள இரத்தக் களஞ்சியங்களை நிரப்பும் நோக்கில் இந்த மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் பெருமளவிலான கடற்படையினர் இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்ய முன்வந்து பங்களித்தனர்.