கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மின்னணு இதழின் ஏப்ரல் இதழ் வெளியிடப்பட்டது

இலங்கை கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்து பொறியியல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப வல்லுநர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ‘Naval Electrical and Electronic Engineering & Technology (NEET)’ மின் இதழில் 2023 ஏப்ரல் இதழ் 2023 மே 23, ஆம் திகதி மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் விராஜ் லீலாரத்ன தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த மின் இதழில் இலங்கை கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்குத் தேவையான உயர்தர பரிசோதனை ஆய்வறிக்கைகள் அடங்கியுள்ளன, மேலும் இந்த இதழ் மின்சாரம் மற்றும் மின்னணுவியல் துறை தொடர்பான பத்திரிகைகள் மற்றும் மாநாடுகளில் வெளியிடப்பட்ட நன்கு மதிப்பாய்வு செய்யப்பட்ட மற்றும் கணிசமான சோதனை ஆய்வறிக்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இந்த மின்னிதழை கடற்படையின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் www.dgl.navy.lk என்ற இணையத்தளத்தில் இருந்து படித்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், கடற்படை மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் குழு இந்த மின் இதழின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.