இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான ஐந்தாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான ஐந்தாவது பணியாளர் சந்திப்பு 2023 மே 24 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடல் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், பாகிஸ்தான் கடற்படைத் தூதுவர் கொமடோர் அஹமட் ஹுசைன் (Commodore Ahmed Hussain), இலங்கை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன மற்றும் கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து சுமூகமான சந்திப்பொன்றை மேற்கொண்டார். அங்கு நினைவுப் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.

கடற்படை ஆயுதங்கள் பணிப்பாளர் கொமடோர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான இலங்கை கடற்படை தரப்பு இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தியது மற்றும் கொமடோர் அஹமட் ஹுசைன் தலைமையிலான பாகிஸ்தான் கடற்படை தரப்பு பாகிஸ்தான் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தியது.

இந்த கலந்துரையாடல் அமர்வின் போது, இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், ஹைட்ரோகிராஃபிக் துறையில் பாகிஸ்தானுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பயிற்சி, கூட்டுப் பயிற்சிகள், தொழில்முறை போன்ற துறைகளில் பரந்த கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.