கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா பதவியேற்பு

ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக இன்று (2023 செப்டம்பர் 03) குறித்த கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.

கடற்படையின் மரபுப்படி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை தெற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் தம்மிக குமார கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் கடமைகளை கையளித்தார்.

கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா கிழக்கு கடற்படை கட்டளையின் திணைக்களத் தலைவர்கள் மற்றும் கட்டளை அதிகாரிகளை உரையாற்றினார். மேலும், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்குப் பின்னர், கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் தம்மிக குமார கிழக்கு கடற்படை கட்டளையிலிருந்து பிரியாவிடை பெற்றார்.