இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் தொடங்கியது

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாம் 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி வெலிசர தொண்டர் கடற்படைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா தலைமையில் தொடங்கியது.

இந்த ஆண்டு (2023) தன்னார்வ கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு பயிற்சி முகாமில் 42 அதிகாரிகள் மற்றும் 443 சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் உட்பட 485 கடற்படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், 2023 செப்டெம்பர் 04 ஆம் திகதி ஆரம்பமான இந்த வருடாந்த பயிற்சி முகாம் 2023 செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் நடத்தப்படும் தொண்டர் கடற்படையின் பிரிவுகளை பரிசோதித்தல் மற்றும் அணிவகுப்பின் பின்னர் வருடாந்த பயிற்சி முகாம் நிறைவுபெறும்.

மேலும், தொண்டர் கடற்படையின் கட்டளை அதிகாரி கொமடோர் நிமல் வசந்த உட்பட, தொண்டர் கடற்படைத் தலைமையகத்தின் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவனத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளைய பயிற்சி அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.