விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணி கடற்படை தலைமையகத்தில் கூடியது

நாட்டில் விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் 2023 செப்டம்பர் 01 ஆம் திகதி விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்படி, விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் 21 பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் விஷம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீண்டநேரம் கருத்துப்பரிமாற்றம் செய்யப்பட்டது.

விஷம் மற்றும் அபாயகரமான மருந்துகளை ஒழிப்பதற்கு சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் (தொற்றா நோய்கள்) டாக்டர் திருமதி எஸ்.சி.விக்ரமசிங்க இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களுக்கான புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எம்.ஜி.என். ஜெயகொடி அவர்களும் கருத்துகள் தெரிவித்தார். மேலும், விஷம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெண்களை வலுவூட்டுவதன் நன்மைகள் குறித்தும் கடற்படை தளபதியின் செயலாளரும் சிரேஷ்ட உதவியாளருமான கமாண்டர் பிரியதர்ஷன உடகும்புரவினால் விளக்கமளிக்கப்பட்டது.

நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுடன் இனைந்து நாட்டில் விஷம் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பதற்கும் ஒரு விரைவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.