கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டில் கடற்படைத் தளபதி பங்கேற்றார்

டிஜிட்டல் மயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் துறை மாற்றம் மூலம் பின்னடைவை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 16வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணி குழுவின் தலைமை அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களின் தலைமையில் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் (ஓய்வு) பங்கேற்புடன் 2023 செப்டெம்பர் 07 ஆம் திகதி குறித்த பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் தொடங்கியதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா குறித்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

அதன்படி, 2023 செப்டம்பர் 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் நடைபெறுகின்ற இந்த ஆண்டுக்கான ஆராய்ச்சி மாநாட்டின் கருப்பொருளின் கீழ் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், கணினி அறிவியல், சட்டம், தொடர்புடைய சுகாதார அறிவியல், தொழில்நுட்பம், குற்றவியல் நீதி, கட்டமைக்கப்பட்ட சூழல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், மேலாண்மை, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் புதிய அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மாநாட்டின் ஆரம்ப நாளில் (2023 செப்டம்பர் 07), பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறையின் கீழ் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்ற தொனிப்பொருளில் முழுமையான அமர்வை நடத்துவதில் கலந்து கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நிபுணர் கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் இராஜதந்திர பிரதிநிதிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, ஆய்வுப் பணிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வியாளர்களும் கலந்து கொண்டனர்.