கடற்படை தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் மறைந்த ஆயுதப்படையினர் நினைவு தினம் பெருமையுடன் கொண்டாடப்பட்டது

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போதும் இலங்கைக்கு சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை சேவையில் இருந்த போதும் உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்றய தினம் (நவம்பர் 11) ஈடுபட்டுள்ளதுடன் பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள், ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் தலைமையில் கடற்படை தலைமையகத்திலும் கட்டளைத் தளபதிகளின் தலைமையில் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்ட இந்த நினைவு தினம், (Remembrance Day) இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து இராணுவ வீரர்களையும் நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் திகதி கொண்டாடப்படுகிறது.

இதன்படி, பிரதிப் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் தலைமையில் கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்காக கடற்படைத் தலைமையகத்தில் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட மற்றும் இளைய மாலுமிகள் கழந்து கொண்டனர்.

அத்துடன், கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுடன் வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமத்திய, தென்கிழக்கு, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதிகளின் தலைமையில் உயிரிழந்த சேவையாளர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றது. மற்றும் அந்த கட்டளைகளுக்கு சொந்தமான கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கடற்படை வீரர்களின் பங்குபற்றுதலுடன் நினைவு தின நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.