2023 கட்டளைகளுக்கு இடையிலான துரப்பணம் போட்டியில் முதலிடத்தை ஏவுகணை கட்டளை பெற்றுள்ளது

இந்த ஆண்டு (2023) கடற்படை கட்டளை களுக்கு இடையிலான துரப்பணம் போட்டித்தொடர் 2023 நவம்பர் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படை கப்பல் 'நிபுன' நிறுவனத்தின் பிரதான பயிற்சி மைதானத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவின் தலைமையில் நடைபெற்றதுடன் இதன் முதலிடத்தை ஏவுகணை கட்டளை பெற்றுள்ளது.

இதன்படி, ஏவுகணை, தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு, தென்கிழக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் பயிற்சி கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒன்பது (09) அணிகளும் மகளிர் அணியொன்றும் உட்பட பத்து (10) அணிகள் இப் போட்டித்தொடரில் கலந்துகொண்டன.

இப்போட்டியின் வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தென் கடற்படை கட்டளைத் தளபதியினால் நடத்தப்பட்டது. இதன்படி, கட்டளைகளுக்கிடையேயான துரப்பணம் போட்டியின் முதலாம் இடத்திற்கான கிண்ணத்தை ஏவுகணை கட்டளை அணியும், இரண்டாம் இடத்தை மகளிர் கடற்படை அணியும், மூன்றாம் இடத்தை தெற்கு கடற்படைக் கட்டளைக் அணியும் வென்றன. போட்டியின் சிறந்த கட்டளை அதிகாரிக்கான கிண்ணத்தை ஏவுகணை கட்டளையை பிரதிநிதித்துவப்படுத்திய லெப்டினன்ட் நவின் ஹெட்டியாராச்சியும், சிறந்த பயிற்சி விளக்கத்திற்கான கிண்ணத்தை கடற்படை வீர்ர் ஆர்.எம்.ஜே.என்.ரத்நாயக்கவும் வென்றனர்.

மேலும், அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட மற்றும் இளநிலை அதிகாரிகள், பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இராணுவ மற்றும் விமானப்படை பயிற்சி பயிற்றுனர்கள் உட்பட கடற்படை வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.