33வது இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் இடம்பெற்றது

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெற்ற 33வது இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், அதன் சான்றிதழ் வழங்கும் விழா 2023 நவம்பர் 18 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி கேட்போர் கூடத்தில் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் கட்டளை அதிகாரி கொமடோர் புத்திக லியனகமகேவின் அழைப்பின் பேரில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஸ் டி சில்வாவின் தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் பணிகள் திறமையாக மற்றும் பயனுள்ளதாக மேற்கொள்ள தெவையான மூலோபாய முடிவுகளை எடுக்கும் போது இளநிலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்கும் திறன் கொண்ட தலைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

அதன்படி, 2023 ஜூலை 11 ஆம் திகதி ஆரம்பமான இந்த பாடநெறிக்காக இலங்கை இராணுவத்தின் ஒரு (01) அதிகாரி, இலங்கை விமானப்படையின் ஒரு (01) அதிகாரி மற்றும் கடற்படையின் பதினைந்து (15) அதிகாரிகள் உட்பட பதினேழு (17) மாணவர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சகல பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவ அதிகாரி மற்றும் சிறந்த கட்டளை ஆய்வறிக்கையை சமர்ப்பித்த மாணவ அதிகாரிக்கான விருதுகளை லெப்டினன்ட் கமாண்டர் என்.என். விக்ரமசூரிய பெற்றுள்ளதுடன், சிறந்த அறிவிப்பாளருக்கான விருதை லெப்டினன்ட் கமாண்டர் டி.ஜே.கே.எஸ்.சிறிவர்தன பெற்றுக்கொண்டார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், இளநிலை கடற்படை பணியாளர்கள் பாடநெறியின் ஆலோசகர்கள் மற்றும் மாணவர் அதிகாரிகளின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.