02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய லொத்தர் சபையினால் கடற்படைக்கு நிதி பங்களிப்பு

தேசிய லொத்தர் சபையின் தளபதி கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன அவர்கள் 02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான காசோலையை 2024 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் கையளித்தார்.

இதன்படி, கடற்படையின் சமூகப் நலப் பணித் திட்டத்தின் கீழ், குருநாகல் மாவட்டத்தில் பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் மற்றும் வீரபொகுண விஜித மத்திய மகா வித்தியாலயத்தில் இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்காக தேசிய லொத்தர் சபையின் நிதி பங்களிப்பு 2024 ஜனவரி 24 ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதன் மூலம், குறித்த கல்லூரிகளின் அத்தியாவசியத் தேவையான சுத்தமான குடிநீரை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் பணிகள் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இரண்டு (02) மாத காலப்பகுதிக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.