76 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்பு

76 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (2024 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மற்றும் தாய்லாந்து பிரதமர் திரு. ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அவர்களின் கௌரவமான பங்கேற்புடன் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

ஜனாதிபதியின் வருகையை அடுத்து, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கௌரவ ஜனாதிபதி அவர்களை பீடத்திற்கு அழைத்துச் சென்றதன் பின்னர் கௌரவ ஜனாதிபதி அவர்கள் தேசியக் கொடி ஏற்றலுடன் தேசிய தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. பாரம்பரியமாக, தேசியக் கொடியின் தயாரிப்புகள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் கடற்படையின் சமிக்ஞைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டன. 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும், ஜெயமங்கல கீதங்கள் பாடப்பட்டபோதும் கடற்படை இசைக்குழுவினர் இசை வழங்கினர்.

76 வது சுதந்திர தின நிகழ்வுக்காக 57 கடற்படை அதிகாரிகள் மற்றும் 889 மாலுமிகள் எட்டு (06) பிரிவுகளின் கீழ் கலந்து கொண்டுள்ளதுடன் கடற்படையின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் காட்சியக்கப்படுத்தும் அணிவகுப்புக்காக 02 அதிகாரிகள் மற்றும் 61 மாலுமிகள் கழந்துகொண்டனர். இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி பணிப்பாளர் கடற்படை பயிற்சி கொமடோர் புத்திக ஜயவீர இந்த அணிவகுப்புக்கு தலைமை தாங்கினார்.

இலங்கை கடற்படையின் கப்பல்களை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தி ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல்களான கஜபாஹு, சயுர மற்றும் சமுதுர 76 வது சுதந்திர தினத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, காலி முகத்திடம் முன் கடலில் நங்கூரமிட்டு, இம்முறை சுதந்திர தின நிகழ்வில் இணைந்தது.

76வது சுதந்திர தின அணிவகுப்பில் கடற்படைக் கொடியை கமாண்டர் மோதித அபேகோண்வினால் கொன்டு செல்லப்பட்டதுடன், கடற்படை இசைக்குழுவின் ஒலிக்கு மத்தியில் கடற்படை, கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரி கடற்படை படையணிகள், கட்டளைகள், நிறுவனங்கள் மற்றும் கடற்படை கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி வண்ணங்கள், கட்டளைக் கொடிகளை ஏந்திய அதிகாரிகளுடன் கூடிய மரியாதை அணிவகுப்புக்கு லெப்டினன்ட் கமாண்டர் வஜிர பண்டார கட்டளையிட்டார்.

கடற்படை அணிவகுப்பின் முதல் கடற்படைப் பிரிவாக, லெப்டினன்ட் கமாண்டர் சங்க பீரிஸ் தலைமையிலான கடற்படை தலைமையகப் பிரிவு வீதியில் அணிவகுத்துச் சென்றது, அதைத் தொடர்ந்து பெருங்கடல் வலயத்தின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதியின் வண்ணங்கள் பெற்ற கடற்படை ஏவுதல் கட்டளையின் படைப்பிரிவுக்காக லெப்டினன்ட் கமாண்டர் சவீந்திர பத்திரன கட்டளை வழங்கினார்.

04 வது துரித தாக்குதல் படகுகள் படையணிக்கு லெப்டினன்ட் கமாண்டர் திலங்க டி சில்வா கட்டளை வழங்கினார். தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இரண்டு தடவைகள் கட்டளையிட்ட கடற்படை சிறப்பு படகுகள் படைப்பிரிவின் அணிவகுப்புக்கு லெப்டினன்ட் கமாண்டர் அனுஷ்க ஜெயவர்த்தன கட்டளை வழங்கினார். விரைவு நடவடிக்கைகள் படகுகள் படையணியின் அணி வகுப்புக்காக லெப்டினன்ட் கமாண்டர் ஜயம்பதி புத்ததாச கட்டளை வழங்கினார். மேலும், இன்றைய அணிவகுப்பின் கடற்படை மரைன் பிரிவுக்கு லெப்டினன்ட் கமாண்டர் சுந்தரராஜ் மகிந்தராஜ்வினால் கட்டளையிடப்பட்டது. வண்ணமயமான அணிவகுப்பு வரிசையில் அடுத்ததாக லெப்டினன்ட் கமாண்டர் உதானி பெரேரா தலைமையில் அனைத்து கிளைகளையும் குறிக்கும் கடற்படை பெண்கள் பிரிவு சென்றது. இலங்கை கரையோரப் படைப் பிரிவிற்கு லெப்டினன்ட் கமாண்டர் உதார மல்லவாராச்சி தலைமை தாங்கினார்.

இலங்கை கடற்படையின் பிரதான ஆயுதங்கள் மற்றும் பாகங்களை தாங்கிச் சென்ற இவ் வாகன மரியாதை அணிவகுப்பிற்கு கமான்டர் அஞ்சன பிரேமரத்ன கட்டளை வழங்கினார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 30 மி.மீ புஷ் மாஸ்டர் வகையினைச் சேர்ந்த ஆயுதம் இரண்டாவது வாகனமாக சென்றது. பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு பீப்பாய்கலைக் கொண்ட 30 மிமீ வகை ஆயுதத்தினை மூன்றாவது வாகனத்திலும் சீனாவில் மற்றும் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை காட்சிப்படுத்தும் வாகனம் நான்காவதாக சென்றது. கடற்படை சுழியோடி பிரிவின் வீரர்கள் தங்களுடைய உபகரனங்கள் கொண்ட சுழியோடி அறையுடன் இந்த அணிவகிப்பில் பயணம் செய்தனர்.

மேலும், சுதந்திர வைபவத்தை வண்ணமயமாக்கும் வகையில், முப்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பங்குபற்றிய பாராசூட் நிகழ்வொன்றும் இடம்பெற்றது, இதுக்காக கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 867 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் விசேட படகுகள் படையின் கட்டளை அதிகாரி கப்டன் தர்மசிறி ஹேரத் அவர்கள் கடற்படைக் கொடி கொண்ட பாராசூட் மூலம் பெருமைமிக்க கடற்படைக் கொடியை ஏந்தியவாறு காலி முகத்துவாரத்தை வந்தடைந்தார்.

மேலும், 537 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் கொமான்டர் திஸ்ஸ குமார, 416 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் பிரதம உயர் சிறு அலுவலர் L.A.A.P குமாரசிங்க, 447 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் உயர் சிறு அலுவலர் டப்.ஏ சிரிவர்தன 480 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் பிரதம உயர் சிறு அலுவலர் ஜீ.சீ.எம்.கே கீகியனகே மற்றும் 418 பாராசூட் தாவல்களுக்கு உரிமைகோரும் சிறு அலுவலர் எம்.ஜீ.எஸ்.ஏ ரந்தீர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சுதந்திரக் கொண்டாட்டத்திற்காக, வணக்கத்திற்குரிய மகாசங்கத்தினர், ஏனைய மத குருமார்கள், இராஜதந்திர அதிகாரிகள், கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அரசாங்க அமைச்சர்கள், அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்னாகொட, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புச் செயலாளர் ஜேனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்‌ஷ, பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோண், கடற்படைத் துனை தளபதி மற்றும் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.