இந்தியாவில் ஜெர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள ஜேர்மன் தூதரகத்துடன் இணைந்த Colonel Klaus Willi Merkel, இலங்கைக்கான ஜேர்மன் பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ளார், குறித்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, கடற்படைத் தளபதி மற்றும் ஜேர்மனி தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் ஆகியோர் பரஸ்பர நலன்கள் தொடர்பான பல விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், ஜேர்மன் தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Colonel (GS) Andre Niedhofer மற்றும் கடற்படை தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றியதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.