காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான கடமைகள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதைக்கான கடமைகள் கடற்படையிடமிருந்து விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளன

கொழும்பு, காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுதல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை 2024 மார்ச் 31 மற்றும் இன்று (2024 ஏப்ரல் 01) இலங்கை கடற்படை மூலம் இலங்கை விமானப்படைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன் இந் நிகழ்வுகள் காலி முகத்திடலில் மற்றும் விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்படி எதிர்வரும் 03 மாதங்களுக்கு காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றுதல் மற்றும் கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை இலங்கை விமானப்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.