இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு

வட பிராந்தியத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கௌரவ திருமதி ஜூலி சங், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ரோஹித அபேசிங்க அவர்களை 2024 மே 15 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இதன்படி, கட்டளைத் தலைமையகத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரை வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி வரவேற்றதன் பின்னர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நைனதீவ் மற்றும் டெல்ஃப்ட் தீவிற்கும் விஜயம் செய்ததுடன், கடற்படையினரால் தேவையான கடல் போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.