சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டுள்ள சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பணியாளர் பாடநெறியை பயிலும் Rear Admiral Hu Gangfeng தலைமையிலான அதிகாரிகள் குழு இன்று (2024 ஜூன் 18) கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்ததுடன் அதிகாரி குழுவின் தலைவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பும் கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
சீன மக்கள் குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நாற்பத்தொரு (41) மாணவர் அதிகாரிகளைக் கொண்ட இந்த அதிகாரி குழு, 2024 ஜூன் 16 முதல் 19 வரை இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணமொன்று மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, இந்த அதிகாரி குழுவின் தலைவர் Rear Admiral Hu Gangfeng அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்த பின்னர், நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் இடம்பெற்றது
மேலும், இலங்கை கடற்படையின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை கோடிட்டுக் காட்டிய கடற்படைத் தளபதியின் விளக்கமளிக்கும் சந்திப்பில் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கடற்படையின் துனை பிரதானி, ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை, ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ், பணிப்பாளர் நாயகம் பயிற்சி, ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர், ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் இலங்கைக்கான சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Senior Colonel Zhou Bo ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.