இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படைக் கப்பல் ருஹுண நிருவனத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிகளைக் கொண்ட இந்த புதிய கட்டிடம் இன்று (2024 ஜூலை 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் 2019 ஆம் ஆண்டு தெற்கு கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இந்த ஆறு மாடிகளைக் கொண்ட கட்டிடம் இன்று (2024 ஜூலை 07) கடற்படைத் தளபதியின் தலைமையில் மகா சங்கத்தினரின் ஆசிற்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, சுமார் 240 இளநிலை மாலுமிகள் தங்கும் வசதியுடன் கூடிய ஆறு மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தின், எதிர்காலத்தில் இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தின் செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், மருத்துவமனை, பொது உணவு கூடம், பிரதான சமையலறை, பிரதான கிடங்குகள் மற்றும் மின் மற்றும் மின்னணு வேலைகள் உள்ளிட்ட புதிய வசதிகள் நிறுவப்படும்.

மேலும், இந்நிகழ்வில், தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, குறித்த கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்கும் ரியர் அட்மிரல் சந்திம சில்வா, கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, தென் கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் இந்திக குணவர்தன மற்றும் பதில் பணிப்பாளர் நாயகம் சிவில் பொறியியலாளர் கொமடோர் ரவி குணசிங்க உட்பட தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் கலந்து கொண்டனர்.