திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது
திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கணபதி சிலையை கொண்ட தேர்த்திருவிழா கடற்படை கப்பல்துறை வளாகத்தில் மற்றும் திருகோணமலை நகரத்தை மையமாகக் கொண்டு 2024 செப்டெம்பர் மாதம் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
திருகோணமலை பகுதி மக்கள் மத்தியில் சமய நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில், திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
அதன்படி, இவ்வருட வருடாந்த கணபதி மகோற்சவ திருவிழாவின் போது திருகோணமலை கடற்படைத் தளம் உட்பட அனைத்து கடற்படையினருக்கும் ஆசிர்வாதம் வேண்டி கடற்படை கப்பல்துறையில் அமைந்துள்ள கணபதி ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் இந்து சமய வழிபாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் பின்னர் கணபதி சிலையை கொண்ட தேர்த்திருவிழா கடற்படை கப்பல்துறை வளாகத்தில் சென்றது. பின்னர் திருகோணமலை நகரிலுள்ள கணபதி ஆலயத்திற்கு தேர்த்திருவிழா சென்ற பின்னர் கடற்படை கப்பல்துறையில் வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக நிறைவுற்றது.
மேலும், இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி ரியர் அட்மிரல் வருண பெர்டினாண்டஸ், கட்டளையின் சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் அப் பகுதி இந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.