அமெரிக்க பசிபிக் படையணியின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உலகின் மிகப்பெரிய கடற்படையான அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளை அதிகாரி அட்மிரல் Stephen T. Koehler இன்று (2024 அக்டோபர் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

அதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தலைமையகத்திற்கு வந்த அட்மிரல் Stephen T. Koehler, உட்பட அனைவரையும் கடற்படைத் தலைமையகத்திற்கு அன்பாக வரவேற்றிய பின்னர், கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க மரியாதைக்குரிய மரியாதை வழங்கினர்.

பின்னர், அட்மிரல் Stephen T. Koehler மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு இடையில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்கள், பேரிடர் பதிலளிப்பு, சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல், அத்துடன் அபிவிருத்தி சுதந்திரமான மற்றும் திறந்த இந்திய-பசிபிக் பிராந்தியத்திற்கான வலுவான ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவது தொடர்பாக இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும், அட்மிரல் Stephen T. Koehler உட்பட குழுவினர் இலங்கை கடற்படையின் செயற்பாடுகள் பற்றிய விரிவுரையில் கலந்து கொண்டதுடன் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் செயற்பாடுகளையும் அவதானித்தனர்.

இந்நிகழ்வுக்காக கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட உட்பட கடற்படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன.