கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை

இலங்கை ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 2024 நவம்பர் 22 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்தா(ஓய்வு), பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் வருகை தந்த கௌரவ ஜனாதிபதியை வரவேற்றினர். அதன் பின் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகளை உரையாற்றினார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் கலந்துகொண்டனர்.