இந்தோனேசிய கடற்படைக் கப்பல் 'கிரி சுல்தான் இஸ்கந்தர் முடா-367' (‘KRI SULTAN ISKANDAR MUDA-367’) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இந்தோனேசிய கடற்படையின் SIGMA - CORVETTE ரக கப்பலான 'KRI SULTAN ISKANDAR MUDA-367' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (2024 டிசம்பர் 28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 'KRI SULTAN ISKANDAR MUDA-367' என்ற கப்பல் 90.71 மீற்றர் நீளமும், மொத்தம் 120 பணியாளர்களையும் கொண்டதுடன், குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் (அனுகேரா அன்னுருல்லாஹ்) ANUGERAH ANNURULLAH உள்ளார்.

மேலும், 'KRI SULTAN ISKANDAR MUDA-367' என்ற கப்பல், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் தீவின் முக்கிய இடங்களைப் பார்வையிட உள்ளது, மேலும் குறித்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, 2024 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கயை விட்டு புறப்பட உள்ளது.