காலி முகத்திடளில் தேசிய கொடியை ஏற்றுதல் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகளை கடற்படையினர் பொறுப்பேற்றனர்
காலி முகத்திடளில் தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகள் 2024 டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் இன்று (01 ஜனவரி 2025) ஆகிய இரு தினங்களில் இலங்கை இராணுவத்திடம் இருந்து கடற்படையினரிற்கு காலி முகத்திடல் மற்றும் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டது. .
இதன்படி எதிர்வரும் 03 மாதங்களுக்கு காலி முகத்திடலில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துதல் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் விசேட சம்பிரதாய மரியாதை தொடர்பான கடமைகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த விசேட கடமைகளை இலங்கை கடற்படை பராக்கிரம நிறுவனத்தின் கட்டளை அதிகாரியால் கண்காணிக்கப்படும்.