இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்தது
இன்று காலை (2025 ஜனவரி 01), கடற்படைத் தலைமையகம் மற்றும் அனைத்து கடற்படை நிறுவனங்களிலும் கப்பல்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடிதை தொடர்ந்து, இலங்கை கடற்படை "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய நிகழ்ச்சியில் குடிமக்கள் உறுதிமொழியை நேரலையில் வழங்கினர். அதன் பின்னர் புதிய ஆண்டில், வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆயுதப் படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான திரு.அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் காலி ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆற்றிய ஆரம்ப உரையின் பின்னர், "க்ளீன் ஶ்ரீ லங்கா". குடியுரிமை உறுதிமொழியின் நேரடி ஒளிபரப்புடன், அனைத்து கடற்படை வீர்ர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதன் மூலம் "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கி 2025 ஆண்டின் கடமைகளை ஆரம்பித்ததனர்.
கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற "க்ளீன் ஶ்ரீ லங்கா". குடிமக்கள் உறுதிமொழி வழங்கும் தேசிய நிகழ்ச்சியிலும், கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற "க்ளீன் ஶ்ரீ லங்கா" குடிமக்கள் உறுதிமொழி வழங்கும் நிகழ்விலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட அவர்கள் கலந்துகொண்டார். மற்றும் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கியது; கட்டளைத் தளபதிகள், கடற்படை முகாமைத்துவ சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், கொடி அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகள் மற்றும் அரச ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.