பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான 'BNS SOMUDRA JOY' என்ற கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவை விட்டு வெளியேறியது
2025 ஜனவரி 31, அன்று உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வந்த பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான 'BNS SOMUDRA JOY' (மாற்றியமைக்கப்பட்ட ஹாமில்டன் கிளாஸ் உயர் தாங்குதிறன் கட்டர்) போர்க்கப்பல் இன்று (02 பெப்ரவரி 2025) உத்தியோகபூர்வ விஜயம் நிறைவடைந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் கப்பலுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.
தீவில் கப்பல் தங்கியிருந்த போது, அதன் தளபதி, கெப்டன் Md. Shahriar Alam மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், அங்கு கப்பல்களும் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் பயணத்தில் இணைந்தது.
மேலும், கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சியும் கப்பலில் நடைபெற்றது.