ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான 'ASAHI' கப்பலானது தீவில் இருந்து புறப்பட்டது
விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவுக்கு வந்த ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் 'ASAHI' என்ற கப்பல், 2025 மார்ச் மாதம் 01 ஆம் திகதி விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்து இன்று (2025 மார்ச் 03) தீவை விட்டு வெளியேறியதுடன், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் மரபுப்படி கப்பலிற்கு பிரியாவிடை அளித்தனர்.
இச் சந்தர்ப்பத்தில், கப்பலின் கட்டளைத் தளபதி கமாண்டர் Shota TAKASHIRO, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா ஆகியோருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு 2025 மார்ச் 01 அன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது. குறித்த ‘ASAHI’ கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், அதன் அங்கத்தவர்கள் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டனர்.


