தலைமன்னார், புனித லாரன்ஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலையை கற்றலுக்கு ஏற்ற வளாகமாக மாற்ற கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் தலைமன்னார், புனித லாரன்ஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலையை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைக்கும் பணிகள் 2025 மார்ச் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

"ஒரு வளமான நாடு - அழகான வாழ்வு" என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் " க்லீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்பட்டு வருகின்றது.

இதன்படி "அழகான தீவு - புன்னகைக்கும் மக்கள் " என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில், இலங்கையை சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஆன்மீக ரீதியாக மாற்றும் "க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்தில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கடற்படை செயற்படுவதுடன், குறித்த தேசிய திட்டத்திற்கு இணங்க, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேன்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.

இதன்படி, தலைமன்னார், புனித லாரன்ஸ் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலப்பு பாடசாலையில் உள்ள மாணவர்களின் எதிர்கால கல்விக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும் வகையில், வளாகத்தை சுத்தப்படுத்தி தேவையான திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக வடமத்திய கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் சமூக பராமரிப்பு பங்களிப்பு வழங்கப்பட்டது.