கடற்படைத் தளபதி வட மத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பயிற்சி மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாடினார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்கள் 2025 மார்ச் 8 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாற்றினார். கடற்படைத் தளபதி அவர்கள் கடற்படையின் பணிகளையும் கடமைகளையும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவு மற்றும் உடல் மற்றும் மனத் தகுதியுடன் கூடிய பயிற்சி மாலுமியாகப் பயிற்சி பெறுவதற்கான பொறுப்பை பயிற்சி மாலுமிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு வலியுறுத்தினார்.
அதன்படி இலங்கை கடற்படை கப்பல் ஷிக்ஷா நிறுவனத்தின் கட்டளை தளபதி, கடற்படை தளபதியை ஷிக்ஷா நிறுவனத்திற்கு வரவேற்ற பின்னர், ஷிக்ஷா நிறுவனத்தின் பொது உணவகத்தில், பயிற்சி பெற்று வரும் 257வது மற்றும் 260வது ஆட்சேர்ப்பை சேர்ந்த புதிய மாலுமிகளுடன் கடற்படை தளபதி உரையாற்றினார். பயிற்சிக் காலத்தில், எதிர்கால தொழில் வாழ்க்கைக்குத் தேவையான தலைமைத்துவ மற்றும் நடைமுறை அறிவைப் பெறுவதற்கும், ஒரு இராணுவ நபருக்குத் தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், கடற்படைத் பயிற்சிகளை வெற்றிகரமாகப் பயின்று, பயிற்சியின் முடிவில் புதிய அறிவு, திறன்கள் மற்றும் சரியான அணுகுமுறையுடன் ஒரு முழுமையான மாலுமியாக கடற்படைக்கு சேவை செய்ய உறுதியுடன் இருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக கடற்படையினர் மேற்கொள்ளும் விசேட பணிக்காக ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கு சேவையாற்றுவதற்கு இது சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும் வலியுறித்தினார்.
ஷிக்ஷா நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாற்றிய கடற்படைத் தளபதி, பயிற்சி மாலுமிகளைப் பயிற்றுவிப்பதில் கடற்படையின் பங்கை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் பண்பு, ஒழுக்கம், நடத்தை மற்றும் தலைமைத்துவ பண்புகளை சிறந்த மட்டத்திற்கு மேம்படுத்துவது பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் பொறுப்பாகும். புதிய மாலுமிகளுக்கு நவீன பயிற்சி நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவுடன் தலைமைத்துவ மற்றும் நடைமுறை பயிற்சிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், புதிய மாலுமிகளின் தங்குமிட வசதிகள், உணவு மற்றும் குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற நலன்புரி வசதிகளை கவனிப்பது பயிற்றுவிப்பாளர்களின் பொறுப்பு என்றும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும் வட மத்திய கடற்படை கட்டளை தளபதியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.