சமுத்திரிகா ஆய்வுக் கப்பலின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கடற்படை மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் ஈடுபட்டனர்

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (National Aquatic Resources Research and Development Agency - NARA) கடல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ‘சமுத்திரிகா ‘ ஆராய்ச்சிக் கப்பலின் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு தொடர்பாக 2025 மார்ச் 27 அன்று கடற்படைத் தலைமையகத்தில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையும் (NARA) இலங்கை கடற்படையும் இவ் புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் கையொப்பமிட்டனர்.

இதன்படி, பல்வேறு செயல்பாட்டு வரம்புகள் காரணமாக சமுத்திரிகா கப்பலை அதன் அதிகபட்ச செயல்திறனுடன் கடல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது மட்டுப்படுத்தப்பட்ட பின்னணியில், இலங்கையின் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கடற்படை மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை, கடல்சார்வியல் ஆகியவற்றின் நிபுணர் நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நுழைவதனால் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் கடல் உயிரியல் மற்றும் நீரியல் ஆராய்ச்சி மிகவும் திறமையாகவும், திறம்படவும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இலங்கையின் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் செயற்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை மற்றும் தனித்துவமான சந்தர்ப்பத்தைக் குறிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடற்படையின் சார்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவினாலும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சியினாலும் கையொப்பமிடப்பட்டதுடன், இந்நிகழ்வில் நீரியல் துறை தலைவர், ரியர் அட்மிரல் கோசல வெர்ணகுல சூரிய மற்றும் பலர் கலந்துகொண்டனர்.