இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகர் கௌரவ மேஜர் ஜெனரல் Faheem-Ul-Aziz (ஓய்வு) 2025 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக அவ் கட்டளையின் பிரதித் கட்டளைத் தளபதியைச் சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு விஷயங்கள் குறித்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி இடையே ஒரு சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.