"சிறி தலதா வந்தனாவிற்கு" வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக கடற்படையின் உதவி
2025 ஏப்ரல் 23 அன்று கண்டியில் நடைபெற்ற "சிறி தலதா வந்தனா" நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை ஆய்வு செய்வதற்காக கடற்படைத் தளபதி ஒரு ஆய்வு சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார்.
அதன்படி, "சிறி தலதா வந்தனா" நிகழ்வின் தொடக்கத்திலிருந்தே வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கடற்படை ஒரு சிறப்பு பாதுகாப்பு மற்றும் நலன்புரி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ், கண்டி ஏரி வளாகத்தில் பக்தர்கள் இருக்கும் வழித்தடங்களை உள்ளடக்குவதற்காக, பொதுமக்கள், உயிர்காக்கும் குழுக்கள், சுழியோடி குழுக்கள் மற்றும் பக்தி பாடல் குழுக்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக வசதிகளுடன் கூடிய ஒரு சிறப்பு மருத்துவக் படகை கடற்படை நிறுத்தியுள்ளது. "சிறி தலதா வந்தனா" நிகழ்வில் கலந்துகொள்ளும் மதிப்பிற்குரிய மகா சங்கத்தினருக்கு அன்னதானம் தயாரிப்பதிலும், பக்தர்களுக்கு சமைத்த உணவை வழங்குவதிலும் கடற்படையின் அனைத்து தரப்பினருனும் இணைந்து பங்களிப்பு செய்தனர்.
மேலும், இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது, "சிறி தலதா வந்தனா" யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள் தங்கள் மதக் கடமைகளை எளிதாகச் செய்ய ஏதுவாக, தேவைக்கேற்ப கடற்படை வீரர்களை ஈடுபடுத்த கடற்படைத் தளபதி முறையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், அந்தக் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட கடற்படை வீரர்களின் நலன்புரி வசதிகளையும் கண்காணித்தார்.