பாதுகாப்பு பிரதி அமைச்சர் ராகம 'ரணவிரு செவன'விற்கு விஜயம் செய்தார்
மே 19 ஆம் திகதி நடைபெறும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகளுடன் இணைந்து, கௌரவ. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள், படைகளின் தளபதிகளுடன் சேர்ந்து, ராகமவில் உள்ள 'ரணவிரு செவன 'வில் தங்கி சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்களின் நலன் தொடர்பில் 2025 மே 19 அன்று ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அதன்படி, பாதுகாப்பு பிரதி அமைச்சரும் படைகளின் தளபதிகளும் மனிதாபிமான நடவடிக்கையில் காயமடைந்து ராகம ‘ரணவிரு செவன' வில் சிகிச்சை பெற்று வரும் வீரமிக்க போர்வீரர்களுடன் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், போர்வீரர்களின் தியாகத்தைப் பாராட்டி அவர்களை மேலும் ஊக்குவித்தார்கள்.







































