இந்திய துணைக் கடற்படைத் தளபதி உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் நடைபெரும் எட்டாவது (08) வருடாந்த இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு உரையாடலுக்காக தீவுக்கு வந்த இந்திய கடற்படையின் துணைக் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இன்று (2025 ஜூன் 05) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.

அதன்படி, சிறப்பு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு கடற்படை தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்ட பின்னர், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இலங்கை கடற்படைத் தளபதிக்கும் இந்திய கடற்படைத் துணைத் தளபதிக்கும் இடையே முக்கியமான இருதரப்பு விஷயங்கள் குறித்து சுமுகமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

அதன்படி, இன்று (2025 ஜூன் 05) மூன்று (03) நாட்களாக கொழும்பில் நடைபெற்ற எட்டாவது (08) வருடாந்த இந்திய மற்றும் இலங்கை பாதுகாப்பு உரையாடலுக்காக இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங் (Shri Rajesh Kumar Singh, IAS) உள்ளிட்ட இந்திய பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், இந்தப் பாதுகாப்பு உரையாடலுடன் இணைந்து, இன்று (2025 ஜூன் 05) இந்திய பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி படை நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதிக்கும் இந்திய கடற்படைத் துணைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.