அரச நோர்வே கடற்படைக் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ தீவுக்கு வந்தடைந்தது
அரச நோர்வே கடற்படையின் கப்பலான ‘HNOMS ROALD AMUNDSEN’ விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2025 ஜூன் 10 ஆம் திகதி அன்று தீவை வந்தடைந்ததுடன், மேலும் இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரவேற்க்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.
இவ்வாறாக தீவுக்கு வந்தடைந்த ‘Frigate’ வகைக்கு சொந்தமான HNOMS ROALD AMUNDSEN’ என்ற கப்பலானது 133.25 மீற்றர் நீளமும், மொத்தம் 165 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் SG Cdr Roger Lervik’ பணியாற்றுகிறார்.
மேலும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு, HNOMS ROALD AMUNDSEN’ என்ற கப்பல் இன்று அதிகாலை (2025 ஜூன் 11) தீவை விட்டுப் புறப்பட்டு சென்றது.