இலங்கைக்கான அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் லெப்டினன்ட் கேணல் மெத்யூ ஆலன் ஹவுஸ் (Lieutenant Colonel Matthew Alan House) இன்று (2025 ஜூன் 30) உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு பிரச்சினைகள் குறித்து அமெரிக்க தூதரக இலங்கை பாதுகாப்பு ஆலோசகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையே ஒரு சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நினைவுப் பரிசு பரிமாறப்பட்டது.