இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் கௌரவ ரெமி லம்பர்ட் (Remi Lambert) தேசிய நீரியல் வல்லுநரும் கடற்படை நீரியல் துறைத் தலைவருமான தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரியவை 2025 ஜூலை 04 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கைக்கான கௌரவ பிரெஞ்சு தூதர் மற்றும் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நீர்நிலை அறிவியலில் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகள் பரிமாறப்பட்டன.