கடற்படையின் சமூகப் பணித் திட்டத் தி ன் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட 03 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் மாவட்டத்தின் கலேபிடுனுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை மற்றும் உல்பத்வெவ ஆரண்ய சேனாசனம் ஆகிய இடங்களில் கடற்படையின்தொழில்நுட்ப பங்களிப்புடன், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜாமியுல் மில்ஃபார் ஜும்ஆ மஸ்ஜித் இஸ்லாம் பள்ளிவாசலில் மூன்று (03) கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு, 2025 ஜூலை 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.
மேலும், இந்த 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படை 1112 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு சுமார் 10,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த வழியில் இயக்கப்பட்ட 03 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை, உல்பத்வெவ ஆரண்ய சேனாசனம் மற்றும் ஜாமியுல் மில்ஃபார் ஜும்ஆ மஸ்ஜித் இஸ்லாம் பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாடசாலை குழந்தைகள் உட்பட ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
“நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள் என்ற அரச சுகாதார தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கை கடற்படை இந்த கடற்படை சமூகப் பராமரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.










