சமூக கண் மருத்துவமனை சிலாவத்துறை பகுதியில் கடற்படையினரின் உதவியுடன் நடைபெற்றது
‘சதஹம் கெதெல்ல’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சமூக கண் மருத்துவமனை 2025 ஜூலை 19 ஆம் திகதி சிலாவத்துறை மாவட்ட மருத்துவமனையில் நடைபெற்றதுடன், மேலும் அதன் வெற்றிகரமான நடத்தைக்கு கடற்படை தேவையான ஆதரவை வழங்கியது.
அதன்படி, சிலாவத்துறை பிராந்திய மருத்துவமனையால் மேற்பார்வையிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த சமூக கண் மருத்துவ மனையில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றதுடன், மேலும் அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு நானூறு (400) ஜோடி கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன.