கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

மொனராகலை மாவட்டத்தில் வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவின் மஹாரகம, எதிலிவெவ மற்றும் கோனகங்னார பகுதிகளில் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் மற்றும் அவுட்ரீச் ப்ராஜெக்ட்ஸ் (கெரென்டி) லிமிடெட்டின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இரண்டு (02) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 ஜூலை 24 அன்று பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படையினால் 1119 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டதுடன், இந்த நிலையத்தினால் மஹாரகம, எதில்வெவ மற்றும் கோனகங்னார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.