“க்லீன் ஶ்ரீ லங்கா சைக்கிள் சவாரியில்” கடற்படை இணைகிறது
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணைந்து, பொதுமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ் விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டு வாரம், 2025 ஜூலை 26 அன்று தொடங்கியதுடன் அதனுடன் இணைந்து, அதன் முதல் கட்டமாக அன்றைய தினம் க்லீன் ஶ்ரீ லங்கா தேசிய சைக்கிள் சவாரி வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன்படி, அரசாங்கத்தின் பிரதான நோக்கமான ‘நோயற்ற வாழ்வு – ஆரோக்கியமான மக்களை' திட்டத்தில் 'அழகான வாழ்க்கை' என்பதற்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், இந்த திட்டம் மக்களை ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் கௌரவ விளையாட்டு அமைச்சர் திரு. சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் ஓட்டுதல் சவாரியில் சுமார் ஆயிரத்து இருநூறு (1200) பேர் பங்கேற்றனர். கடற்படை வீரர்களிடையே விளையாட்டுத் திறன் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதன் மூலம் சமூகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் எண்பத்து ஐந்தை (85) விட அதிகமானோர் பங்கேற்றனர்.
விளையாட்டு அமைச்சகத்திலிருந்து தொடங்கிய இந்த சைக்கிள் சவாரி, மொத்தம் நூறு (100) கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சுதந்திர சதுக்கத்தை அடைந்து வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. இதில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.