இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான பிரான்சின் கௌரவத் தூதர் திரு Rémi Lambert, 2025 ஜூலை 30 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, நடைபெறவிருக்கும் 2025 “காலி உரையாடல்” சர்வதேச சமுத்திர மாநாட்டிற்கான பிரான்சின் பங்களிப்பு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் புதுதில்லியில் வசிக்கும், இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் Colonel (Air Force) Emmanuel Peltriaux மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆலோசகர் Commander Jean Baptiste Trouche ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.