இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் Colonel Darren Woods மற்றும் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ள Colonel Keith Miles ஆகியோர் 2025 ஆகஸ்ட் 13 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தனர்.
அதன்படி, கடற்படைத் தளபதி இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய மற்றும் பதவியேற்கவுள்ள பாதுகாப்பு ஆலோசகருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல்களை நடத்தினார்.
இலங்கையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த காலத்தில் Colonel Darren Woods அளித்த ஆதரவிற்கு கடற்படைத் தளபதி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் அவரது எதிர்கால நடவடிக்கைகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.