இலங்கை-இந்தியா இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX-25) கொழும்பில் ஆரம்பமாகியது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12) இருதரப்பு கடற்படைப் பயிற்சி (SLINEX - 25) இன்று (2025ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான விஜயபாகுவில், இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் Dr. Satyanjal Pandey அவர்களின் தலைமையிலும், கடற்படையின் இயக்குநர் ஜெனரல் செயல்பாடு ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே அவர்களின் பங்கேற்பிலும் தொடங்கப்பட்டது.

செயல்பாட்டு இடைச்செயல்பாட்டை மேம்படுத்துதல், நிலையான இயக்க நடைமுறைகள், திறன்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர புரிதலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் இந்தப் பயிற்சி, துறைமுக அத்தியாயம் மற்றும் சமுத்திர அத்தியாயம் என இரண்டு (02) கட்டங்களைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படையின் ‘INS Jyoti’ என்ற Tanker வகை போர்க்கப்பல்களும், ‘INS Rana’ என்ற Destroyer வகை போர்க்கப்பல்களும் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களான 'விஜயபாகு' மற்றும் 'சயுர' ஆகியவை பங்கேற்கின்றன.

அதன்படி, இந்தப் பயிற்சியின் துறைமுகக் அத்தியாயம் 2025 ஆகஸ்ட் 14 முதல் 16 வரை கொழும்பு துறைமுக வளாகத்திலும் , கடல் அத்தியாயம் ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இலங்கைக்கான கடற்பரப்பிலும் நடைபெற உள்ளது. இன்று (2025 ஆகஸ்ட் 14) தொடங்கிய துறைமுகக் அத்தியாயத்தின் போது, இந்தப் பயிற்சி தொடர்பான தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு நுட்பங்கள் குறித்து செயல்பாட்டுக் குழுக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு அறிவுப் பகிர்வு நடத்தப்படும், அதே நேரத்தில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணப் பயிற்சி அமர்வானது புத்தளம் கங்கேவாடி, விரைவு தாக்குதல் படை தலைமையகத்தில் நடைபெறும்.மேலும், இலங்கை விமானப்படையின் பங்கேற்புடன் விமான சேவைகள் குறித்த அடிப்படைப் பயிற்சியும் துறைமுகக் அத்தியாயத்தின் போது நடைபெற உள்ளது.

இங்கு கடல், அத்தியாயத்தின் கப்பல் கையாளுதல் உள்ளிட்ட வெவ்வேறு பயிற்சிகள், கடலில் இருக்கும்போது கப்பல்கள் மற்றும் கப்பல்களை ஆய்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் ஏறுதல், தேடுதல் மற்றும் பறிமுதல் பயிற்சிகள், கப்பல் அமைப்புகள் வழியாக செல்லும் பயிற்சிகள், கடலில் கப்பல்களுக்கு இடையே ஒளிரும் விளக்குகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது, ஆயுதங்களை கையாளுதல் பயிற்சிகள், கடலில் வான்வழி சரக்கு பரிமாற்றம் மற்றும் (Abeam/ Astern fuelling approaches) எரிபொருள் அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு கடற்படைப் பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு உறுதியளித்த முக்கிய பங்குதாரர்களாக, இந்த இலங்கை-இந்திய இருதரப்பு கடற்படைப் பயிற்சி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி, கூட்டு அணுகுமுறை மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் வழக்கத்திற்கு மாறான கடல்சார் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட புதிய போக்குகளுக்கு பதிலளிக்கத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தந்திரோபாய இடைச்செயல்பாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சித் தொடரின் பன்னிரண்டாவது (12வது) கட்டம், இன்று (2025 ஆகஸ்ட் 14) கொழும்பில் தொடங்கியது.

மேலும், SLINEX-25 இன் தொடக்க விழாவில் இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர அதிகாரிகள், கடற்படையின் துணைத் தலைமைத் தளபதி மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள்‘INS Jyoti’, ‘INS Rana’, இலங்கை கடற்படை கப்பல் விஜயபாகு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் சயுர ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள் உட்பட அதன் அங்கத்தவர்கள் மற்றும் இலங்கை விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.