SLINEX - 25வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பன்னிரண்டாவது (12வது) இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (SLINEX – 25) பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பல்களான ‘INS Jyoti’ மற்றும் ‘INS Rana’ ஆகிய கப்பல்கள் இன்று (2025 ஆகஸ்ட் 14) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன, மேலும் இலங்கை கடற்படையினரால் கப்பல்கள் கடற்படை மரபுகளின்படி வரவேற்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள ‘INS Jyoti’ என்ற Tanker வகை கப்பல், 180.16 மீட்டர் நீளமும் அதன் அங்கத்துவர்களின் எண்ணிக்கை 200 ஆவதுடன், இதன் கட்டளை அதிகாரியாக கேப்டன் Chetan R Upadhyay கடமையாற்றுகின்றார். ‘INS Rana’ என்ற Destroyer வகை கப்பல், 147 மீட்டர் நீளமும் அதன் அங்கத்துவர்களின் எண்ணிக்கை 300 ஆவதுடன் இதன் கட்டளை அதிகாரியாக கேப்டன் KP Sreesan கடமையாற்றுகின்றார்.

‘INS Jyoti’ கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையேயான உத்திகோகப்பூர்வ சந்திப்பு மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது, மேலும் இரண்டு கப்பல்களும் இன்று (2025ஆகஸ்ட் 14) ஆம் திகது முதல் ஐந்து (05) நாட்களுக்கு கொழும்பு துறைமுகத்திலும் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்பரப்பிலும் நடைபெறும் SLINEX - 25 இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்குப் பின், இவ் கப்பல்கள் இரண்டும் தீவை விட்டுப் புறப்பட உள்ளன.

மேலும், SLINEX-25 இருதரப்பு கடற்படைப் பயிற்சியுடன் இணைந்து, இந்தக் கப்பல்களின் அங்கத்தவ குழுவினர்கள், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.