இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பழுதடைந்த மதகை சரிசெய்ய கடற்படை சுழியோடிகளின் பங்களிப்பு
அனுராதபுரத்தில் உள்ள இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் செயல்படாத மதகை பழுதுபார்த்து மீட்டெடுக்க கடற்படை 2025 ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் சுழியோடல் நடவடிக்கைகளின் மூலம் கடற்படை தனது உதவியை வழங்கியது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் மதகு, இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்துவிட்டதாகவும், அதன் நீருக்கடியில் பழுதுபார்ப்புகளுக்கு கடற்படையின் சுழியோடி உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையிடம் விடுத்த கோரிக்கைக்கு கடற்படை உடனடியாக பதிலளித்தது. இதற்காக வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து சுழியோடி குழுவை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும், கடற்படை சுழியோடிகள் செயல்படாத மதகு வாயிலை அதன் செயல்பாட்டு நிலைக்கு மீட்டெடுத்தனர்.