பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியை கடற்படையினர் வெற்றிகரமாக நடத்தினர்
அம்பாறை, பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் மன நலனை மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உளவியல் ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை கடற்படையினர் 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிறுவன கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தினர்.
'க்லீன் ஶ்ரீ லங்கா' என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, கடற்படை சமூகத்தை சமூக ரீதியாக மேம்படுத்துவதற்காக தொடர்ந்து சமூக சேவையை வழங்கி வருகிறது.
அதன்படி, கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக, தென்கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் மூலம், பாடசாலை மாணவர்களின் ஆளுமையை கட்டியெழுப்பும் நோக்கில் இவ் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், பொத்துவில் சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.