எட்டு நாடுகளின் பங்கேற்புடன் திருகோணமலையில் ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ போட்டியில் ஐந்தாவது பதிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியால் ஐந்தாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘Commandant’s Cup Sailing Regatta - 2025’ பாய்மரப் போட்டி,திருகோணமலை செண்டி பே இல் 2025 ஆகஸ்ட் 20, முதல் நான்கு (04) நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களின் தலைமையில் 2025 ஆகஸ்ட் 23, அன்று வழங்கப்பட்டன.
இலங்கை பாய்மரப் படகு சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) மேற்பார்வையின் கீழ் Cup Championship போட்டியின் கீழ் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஈரான், இத்தாலி, ஓமான், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட எட்டு (08) நாடுகளைச் சேர்ந்த கடற்படை அகாடமிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட முப்பத்து மூன்று (33) போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டி Laser, Enterprise மற்றும் Open Championship ஆகிய மூன்று (03) பிரிவுகளின் கீழ் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் மிகவும் தனித்துவமான அம்சமான Cup Championship ஐ இந்திய கடற்படை அகாடமி அணி வென்றது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கடற்படை அகாடமி அணி இரண்டாவது இடத்தையும், இலங்கை கடற்படை அணி மூன்றாவது இடத்தையும் பிடித்த்து.
Laser (ILCA 6) பிரிவில் முதலிடத்தை ஈரானிய கடற்படை அகாடமியின் மாணவச் சிப்பாய் அதிகாரி Syed Sakhir Ali Shah மற்றும் Muhammad Shaaf Afzal ஆகியோர் வெற்றி பெற்றனர்., அதே பிரிவில் இரண்டாவது இடத்தை இந்திய கடற்படை அகாடமியின் மாணவச் சிப்பாய் அதிகாரி Himanshu , Boddapu Harish மற்றும் அதே பிரிவில் மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கடற்படை அகாடமியின் மிட்ஷிப்மேன் Maddison Mandy Markey உம் வென்றனர்.
Enterprise பிரிவில் முதலிடத்தை பாகிஸ்தான் கடற்படை அகாடமியைச் சேர்ந்த மாணவச் சிப்பாய் அதிகாரிகளான Syed Sakhir Ali Shah மற்றும் Muhammad Shaaf Afzal ஆகியோர் வென்றனர். அதே பிரிவில் இரண்டாவது இடத்தை இந்திய கடற்படை அகாடமியைச் சேர்ந்த மாணவச் சிப்பாய் அதிகாரிகளான Himanshu மற்றும் Boddapu Harish ஆகியோர் வென்றனர், அதே பிரிவில் மூன்றாவது இடத்தை இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியைச் சேர்ந்த மாணவச் சிப்பாய் அதிகாரிகளான எச்எம்கேஎம். பண்டார மற்றும் ஆர்பிடிஎஸ். தீக்ஷன ஆகியோர் வென்றனர்.
Open Championship பிரிவில், முதலிடத்தை ஈரானிய கடற்படையைச் சேர்ந்த மிட்ஷிப்மேன் Mohammad Navidi, இரண்டாம் இடத்தை இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் தினிது டி சொய்சாவும், மூன்றாம் இடத்தை லெப்டினன்ட் தமேஷ் பியமாலும் வென்றனர்.
போட்டியின் நிறைவு விழாவில் பேசிய கடற்படைத் தளபதி, முதலில் வெளிநாட்டு கடற்படை அகாடமிகள் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதில் உற்சாகமாக பங்கேற்றதற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கடற்படைத் தளபதி மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்து, பாய்மர படகோட்ட போட்டி என்பது வெறும் போட்டி மட்டுமல்ல, பங்கேற்பாளர்களிடையே தொழில்முறை, பரஸ்பர மரியாதை மற்றும் கடல்சார் சிறப்பை வளர்க்கும் ஒரு தனித்துவமான செயல்பாடு என்றும் கூறினார். பல நாடுகள் இந்தப் போட்டிக்கு மிகவும் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும், வெளிநாட்டு கடற்படை அகாடமிகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் இந்தப் போட்டியில் பங்கேற்பது மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார். அடுத்த போட்டியில் இந்த பொன்னான வாய்ப்பிலிருந்து பயனடைய அதிக வெளிநாட்டு பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம், விளையாட்டு மூலம் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தவும், தீவில் நீர் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும், சுற்றுலாவை ஈர்க்கவும் கடற்படை எதிர்பார்கிறது.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, அக் கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திர பிரதிநிதிகள், வெளிநாட்டு கடற்படை அகாடமிகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை பாய்மரப் படகு சங்கத்தின் (Yachting Association of Sri Lanka - YASL) உறுப்பினர்கள், கடற்படை பாய்மரக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.